தமிழ்நாடு அரசுப் பேருந்தில் நடை பலகை உடைந்து பஸ்ஸிலிருந்து கீழே விழுந்து உயிர் தப்பிய பெண். ஓட்டுநர், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மீது கேரள பொலீஸார் வழக்குப் பதிவு.

ராஜபாளையத்தைச் சேர்ந்தவரும், கேரள மாநிலம், காயங்குளத்தில் வசித்து வருபவருமான திருமதி.சுவாதி என்ற பயணி, தென்காசியிலிருந்து கேரள மாநிலம் செல்லும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் தென்காசி கிளையைச் சேர்ந்த அரசுப் பேருந்தில் நேற்று [16.9.2015] காலை பயணித்துள்ளார். பேருந்து புனலூர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு 200 அடி தூரம் சென்ற போது ஒரு இருக்கையிலிருந்து மற்றொரு இருக்கைக்கு மாறிய போது நடை மேடை உடைந்து அதன் வழியே அப்பெண் சாலையில் விழுந்தார். பயணிகள் அலறியதால் ஓட்டுநர் வண்டியை நிறுத்தினார். அதனால் அப்பெண் காயங்களுடன் உயிர் தப்பினார்.

நிகழ்விடத்திற்கு விரைந்த கேரள காவல்துறையினர் பெண்ணை மீட்டு, வைத்திய சாலையில் அனுமதித்துவிட்டு, ஓட்டுநர் மீதும், தரச்சான்று வழங்கிய வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மீதும்  வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலறுகிறார். அவர் ஆய்வு செய்த போது பலகை புத்தம் புதியதாக இருந்ததாம். [முழு பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைப்பதைப் போல] எத்தனை அசம்பாவிதங்கள் வந்தாலும் நம்ம அதிகாரிகள் திருந்தவே மாட்டார்களா? பயணிகளே தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணிப்பதை முடிந்தவரை தவிர்த்திடுங்கள். தவிர்த்தீர்களானால்தான் உங்கள் உயிர் உங்களுக்கு…….. Continue reading

Advertisements