2800 Special Buses for Kumbakonam Mahamaham

TNSTC Special service for Mahamaham Festival-2016

TNSTC going to Operate 2800 special buses for Mahamaham Festival-2016 held at Kumbakonam. 1361 Special buses from Erode, Coimbatore, Trichy, Palani and Madurai. Vadalur, Tiruvannamalai and Chennai 809 Special buses and 337 Special Buses to Mayiladuthurai, Karaikal. also 195 Special buses to Thiruvarur, Nagapattinam, Mannargudi

மகாமகத்தை முன்னிட்டு அமைக்கப்பட உள்ள 6 தாற்காலிக பேருந்து நிலையங்கள் மூலம் 2800 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுப்பையன் தெரிவித்தார்.

இதுகுறித்தி ஆட்சியர் கூறியது: மகாமக விழாவில் மாநிலத்தில் உள்ள அனைத்துப் போக்குவரத்துக்கழகங்கள் மூலம் 2800 பேருந்துகள் சென்னை மற்றும் மாநிலத்தின் பிற முக்கிய ஊர்களிலிருந்து இயக்கப்பட உள்ளன. இவ்விழாவுக்காக இந்நகரைச் சுற்றி 6 தாற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கொரநாட்டு கருப்பூரில் அமையவுள்ள நிலையத்தில் திருவையாறு, நீலத்தநல்லூர் மற்றும் தஞ்சாவூர் மார்க்கத்திலிருந்து வரும் பக்தர்கள் இறங்க வேண்டும்.

தாராசுரம் புறவழிச்சாலையில் உள்ள பொன்னையா ராமஜெயம் கல்லூரி மைதானத்தில் அமையவுள்ள நிலையம் தஞ்சாவூர் மார்க்கம் வழியாகச் செல்லும் பக்தர்கள் ஏறும் இடமாகும். இங்கிருந்து தஞ்சாவூர், திருச்சி, கோவை, ஈரோடு, பழனி, மதுரை, போன்ற ஊர்களுக்கு செல்ல 1361 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. உள்ளூர் பேருந்து நிலையம் சென்னை மார்க்கத்திலிருந்து வரும் பக்தர்கள் இறங்கும் இடமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அசூர் தாற்காலிக பேருந்து நிலையம் சென்னை மார்க்கம் வழியாகச் செல்லும் பக்தர்கள் ஏறும் இடமாகும். இங்கிருந்து வடலூர், திருவண்ணாமலை, சென்னை போன்ற ஊர்களுக்குச் செல்ல 809 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. செட்டிமண்டபம் பேருந்து நிலையத்திலிருந்து மயிலாடுதுறை, காரைக்கால் மார்க்கத்திலிருந்து வரும் பக்தர்கள் ஏறுவதற்காகவும், இறங்குவதற்கான இடமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து மயிலாடுதுறை, காரைக்கால் போன்ற ஊர்களுக்குச் செல்ல வசதியாக 337 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நாட்டார் தலைப்பு பகுதியில் அமையவுள்ள நிலையம் திருவாரூர், மன்னார்குடி மார்க்கத்திலிருந்து வரும் பக்தர்கள் ஏறும் மற்றும் இறங்கும் இடமாகும். இங்கிருந்து திருவாரூர், நாகப்பட்டினம், மன்னார்குடி, போன்ற ஊர்களுக்கு 195 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் இந்த நிலையங்களிலிருந்து கும்பகோணத்தைச் சுற்றியுள்ள திருநாகேஸ்வரம், ஒப்பிலியப்பன்கோயில், சுவாமிமலை, பட்டீஸ்வரம் மற்றும் நவக்கிரகத் தலங்களுக்கு சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

Courtesy : Dinamani

News Shared by Bharathy at Kumbakonam

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s