Pollachi-Ayyampudhur New Service

TNSTC-CBE New Service to rural village area

TNSTC-Coimbatore region introduced new Service in Pollachi-Ayyampudhur Route Via Chinna Negamam. This service will be more helpful to the school children’s, College students and Public.

Ayyampudhur to Pollachi Bus Timings : 07.45, 16.30
201602190028491767_Near-Samathur-to-ayyamputurMP-Bus-Facility-Mahendran_SECVPF.gif

நெகமம் அருகே உள்ள அய்யம்புதூருக்கு பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை மகேந்திரன் எம்.பி. தொடங்கி வைத்தார்.
பஸ் வசதி

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட அய்யம்புதூர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிக்கு பஸ் வசதி இல்லாததால் பொது மக்கள், பள்ளி மாணவ–மாணவிகள் கடும் சிரமம் அடைந்து வந்தனர். மேலும் அவர்கள் வெளியூர்களுக்கு செல்ல வேண்டும் எனில் சின்ன நெகமம் வந்து, அங்கிருந்து தான் பஸ்களில் பொள்ளாச்சி உள்பட பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டும்.

எனவே பொள்ளாச்சியில் இருந்து சின்ன நெகமம் வழியாக அய்யம்புதூருக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அய்யம்புதூருக்கு பஸ் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
பஸ் போக்குவரத்து தொடக்கம்

இதன்படி பொள்ளாச்சியில் இருந்து அய்யம்புதூருக்கு பஸ் இயக்க தொடக்க நிகழ்ச்சி சின்னநெகமம் ஊராட்சி மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் ராதாமணி, ஒன்றிய கவுன்சிலர் செந்தில்பிரபு, ஊராட்சி செயலாளர் ஆறுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மகேந்திரன் எம்.பி. கலந்து கொண்டு புதிய பஸ் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும் போது கூறியதாவது:–

அய்யம்புதூருக்கு பஸ் வசதி இல்லாததால், பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். அவர்களின் வசதிக்காக தற்போது பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா பள்ளி மாணவ–மாணவிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் தடவை

இந்த பஸ் தினமும் காலை அய்யம்புதூரில் இருந்து பொள்ளாச்சிக்கு காலை 7.45 மணிக்கும், மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு செல்லும். பொதுமக்களிடையே உள்ள வரவேற்பை பொறுத்து கூடுதல் தடவை பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பஸ் போக்குவரத்து தொடக்க நிகழ்ச்சியில் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமோதரன், பேரூராட்சி தலைவர் சோமசுந்தரம் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மோகன், வீரமுத்து, கணேசன், மனோகரன், முருகவேல் உள்பட போக்குவரத்து கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Courtesy : Daily Thanthi

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s