TN 74 N 1769-TN 74 N 1774-TN 74 N 1776-TN 74 N 1777 Nagercoil Region Newbies

TN 74 N 1769 Body Built By Ranithottam Central Workshop. Ranithottam-1 branch Worked END TO END Tirunelveli. Continue reading

Advertisements

TN 74 N 1766 New Baby

TN 74 N 1766 நாகர்கோவில் மண்டலம், இராணித்தோட்டம்-3 கிளையைச் சார்ந்தது. கடந்த எட்டாம் திகதி பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட இப்பேருந்து இராணித்தோட்டம், மத்திய பணிமனையில் கூண்டு கட்டப்பட்டது. பார்வதிபுரம்-பார்வதிபுரம் வழித்தடத்தில் சுற்றுப் பேருந்தாக இயக்கப்படுகிறது. Continue reading

நாகர்கோவில் மண்டலத்திற்கு 11 புதிய பேருந்துகள்

நேற்றைய [8.2.2016] தினம் முதல்வரால் கொடியசைத்தும், காணொளிக் காட்சிகள் மூலமும் துவங்கி வைக்கப்பட்ட 701 பேருந்துகளில் திருநெல்வேலி கோட்டத்திற்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான 18 பேருந்துகளே ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 11 பேருந்துகள் நாகர்கோவில் மண்டலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நாகர்கோவில், இராணித்தோட்டம், மத்திய பணிமனையில் கூண்டு கட்டப்பட்டவையாகும் என தெரிகிறது. Continue reading

அந்த நாள் ஞாபகம்

அந்த வண்ணமயமான நாட்களை எம் நெஞ்சங்களிலிருந்து அகற்றி விட முடியாது. இதோ சமீபத்தில் நாகர்கோவிலில் நண்பர் ஒருவரின் பழைய சாமான் கடையில் கண்ணைப் பல திசையிலும்  சுழல விட்டுக் கொண்டிருந்தபோது திடீரென ஓரிடத்தில் நூற்றுக் கணக்கான துக்ளக் புத்தகங்கள் கட்டுக் கட்டாக விரவிக்கிடந்தன. ஓர் ஏக்கம் அங்கொன்று இங்கொன்றாக ஏதேனும் வண்ணமயமான பழைய பேருந்துகளின் படங்கள் புத்தகங்களுக்குள் ஒளிந்து கிடக்காதா என்று ஒரு தேடல். தேடல் முடிவடைவதற்குப் பல மணிநேரங்கள் பிடித்தது. தேடியதற்குப் பலன் கிடைத்தது. ஏதோ ஆறு படங்கள் கிடைத்ததன. அதை இங்கே நமது பிருந்தாவனம் வலைப்பூ பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.  Continue reading

தசாப்தத்தில் சகாப்தம் த.நா-72 நா-1766

ஆம்….. மூன்று தசாப்தங்களில் ஒரு சகாப்தமாக கன்னியாகுமரி கிளையைச் சேர்ந்த த.நா-72 நா-1766 பேருந்து மறு வடிவம் பெற்று சாலைகளில் பயணிக்கிறது. அதிசயம்… ஆனால் உண்மை. இப்பேருந்து சமீபத்தில் அஞ்சுகிராமம் அருகே தீப்பற்றி முழுமையாக எரிந்துவிட்டது. விசாரணையில் மின் கோளாறினால் இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்தது. பொதுவாக கடந்த காலங்களில் இது போன்று தீ விபத்தில் பாதிக்கப்படும் பேருந்துகள் அதன் பின் மறு சீரமைக்கப்படுவதில்லை. அப்படி பல கட்சிக் கலவரங்களில் எத்தனையோ புதிய பேருந்துகள் கூட கடந்த காலங்களில் தீ வைக்கப்பட்டதுண்டு. அப்பேருந்துகள் மறு வடிவம் பெறாமலேயே கழிக்கப்பட்ட வரலாறுகள் இம்மாவட்டத்தில் உண்டு.

அண்டை மாநிலத்தில் கேரள அரசுப் பேருந்து கூட புதிய பேருந்தாக இருந்த பின்னரும் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட பின் கழிக்கப்பட்டது சமீபத்தில் நாம் கண்ணுற்ற சேதி.

ஆனால் அவ்வரலாறுகளையெல்லாம் தவிடு பொடியாக்கி ஒரு சாதனையை சத்தமில்லாமல் நிகழ்த்தியிருக்கிறது நாகர்கோவில் மண்டலம். ஆம். பேருந்து விசிறிகள் கணிப்பையெல்லாம் தாண்டி நாகர்கோவில், மத்திய பணிமனையில் மேற்சொன்ன பேருந்திற்கு  மறு வடிவம் அளிப்பதென அதிகாரிகளால் முடிவெடுக்கப்பட்டு நீண்ட நாள் இராணித்தோட்டம் பணிமனையில் கூண்டு கட்டுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டு ஒருவாறாக இங்கேயே புறநகர் பேருந்தாக இருந்தது தற்போது நகரப் பேருந்தாக கூண்டு கட்டப்பட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஓடத்துவங்கியது. அதனை இன்றுதான் படம் பிடிக்க முடிந்தது.

ஒரு வரலாற்றைப் புரட்டிப் போட்ட நாகர்கோவில் மண்டலத்தினைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். Continue reading

TN 38 N 2337 Coimbatore-Kanniyakumari Deepawali Special Bus

TN 38 N 2337 உக்கடம் கிளையைச் சேர்ந்த இப்பேருந்து தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்தாக கோவை-கன்னியாகுமரிக்கு இன்று இயக்கப்பட்டது. கோவைப் பேருந்தைக் கன்னியாகுமரியில் படம் பிடிக்கும் ஒரு வாய்ப்பு எமக்கு இன்று கிட்டியது. Continue reading

6 ஆண்டுகளைக் கடந்து ஓடும் 300 அரசு விரைவு பஸ்கள்: பராமரிப்புப் பணிகளில் மெத்தனத்தால் கடும் அவதிப்படும் பயணிகள்

செவிடன் காதில் ஊதிய சங்கு……. ஆம் பயணிகள் அன்றாடும் படும் சொல்லொணா துயரங்கள் குறித்து எத்தனையோ ஆக்கங்கள் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் வந்து கொண்டேதானிருக்கின்றன. பயணிகளின் அவதிகளும் தொடர்ந்து நடந்தேறி கொண்டேதானிருக்கின்றன. ஆனால் அரசாங்கம் மட்டும் காதில் போட்டுக்கொளவதாக இல்லை. என்றுதான் போக்குவரத்துக் கழகங்களுக்கு விமோசனம் பிறக்கப்போகிறது?  Continue reading

யோக்கியர் வாராரு சொம்பத்தூக்கி உள்ள வை…….. கடமை தவறிய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பணியிடை நீக்கம் இல்லை ?

பேருந்தின் பலகை உடைந்து பெண் விழுந்த சம்பவம்: அதிகாரிகள் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம்…..

கிளை மேலாளரைப் பணி நீக்கம் செய்துள்ளாராம் பொது மேலாளர். பொது மேலாளரையும், நிர்வாக இயக்குநரையும் அல்லவா பணி நீக்கம் செய்திருக்கவேண்டும்.

எத்தனையோ வருடக்கணக்கில் ஒட்டுப் போட்டு கடமையைக்  கழித்துக் கொண்டிருந்தபோது தரச்சான்று வழங்கும்போது கவனிக்காமல் தனது பொறுப்பிலிருந்து தவறிய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஏன் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படவில்லை…..?   Continue reading

தமிழ்நாடு அரசுப் பேருந்தில் நடை பலகை உடைந்து பஸ்ஸிலிருந்து கீழே விழுந்து உயிர் தப்பிய பெண். ஓட்டுநர், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மீது கேரள பொலீஸார் வழக்குப் பதிவு.

ராஜபாளையத்தைச் சேர்ந்தவரும், கேரள மாநிலம், காயங்குளத்தில் வசித்து வருபவருமான திருமதி.சுவாதி என்ற பயணி, தென்காசியிலிருந்து கேரள மாநிலம் செல்லும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் தென்காசி கிளையைச் சேர்ந்த அரசுப் பேருந்தில் நேற்று [16.9.2015] காலை பயணித்துள்ளார். பேருந்து புனலூர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு 200 அடி தூரம் சென்ற போது ஒரு இருக்கையிலிருந்து மற்றொரு இருக்கைக்கு மாறிய போது நடை மேடை உடைந்து அதன் வழியே அப்பெண் சாலையில் விழுந்தார். பயணிகள் அலறியதால் ஓட்டுநர் வண்டியை நிறுத்தினார். அதனால் அப்பெண் காயங்களுடன் உயிர் தப்பினார்.

நிகழ்விடத்திற்கு விரைந்த கேரள காவல்துறையினர் பெண்ணை மீட்டு, வைத்திய சாலையில் அனுமதித்துவிட்டு, ஓட்டுநர் மீதும், தரச்சான்று வழங்கிய வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மீதும்  வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலறுகிறார். அவர் ஆய்வு செய்த போது பலகை புத்தம் புதியதாக இருந்ததாம். [முழு பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைப்பதைப் போல] எத்தனை அசம்பாவிதங்கள் வந்தாலும் நம்ம அதிகாரிகள் திருந்தவே மாட்டார்களா? பயணிகளே தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணிப்பதை முடிந்தவரை தவிர்த்திடுங்கள். தவிர்த்தீர்களானால்தான் உங்கள் உயிர் உங்களுக்கு…….. Continue reading

இரு சக்கர வாகனத்தைப் பதம் பார்த்த தநா 72 நா 1783

விவேகானந்தபுரம் கிளையைச் சேர்ந்த  தநா 72 நா 1783 இன்று காலை 6.30 மணியளவில் கன்னியாகுமரியிலிருந்து தூத்துக்குடிக்குப் புறப்பட்டுச் சென்றது. பரமார்த்தலிங்கபுரம் சென்றபோது வண்டி ஓட்டுநரின்  கட்டுப்பாட்டை இழந்து இடப்பக்கமிருந்து வலப்பக்கமாக இழுத்துச் சென்று மூடிக்கிடக்கும் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தின் தாழ்வான சுவரில் இடித்து நின்றது. இரு சக்கரங்களும் திசைக்கொன்றாக நிற்பதைப் படத்தில் காணலாம். அந்நேரம் அவ்வழியாக வந்த இருச்சக்கர வாகனத்தின் மீதும் மோதியதில் அதில் வந்தவர் தூக்கி வீசப்பட்டார். வாகனம் நொறுங்கியது. எனினும் உயிர்ச்சேதமில்லை. ஓட்டியவர் தலைக்கவசம் அணிந்திருந்ததனால் உயிர்பிழைத்தார். Continue reading

TN 32 N 1915-TN 58 N 0490 காலத்தை வென்ற பேருந்துகள்

TN 32 N 1915 குளச்சல் பணிமனைக்குச் சொந்தமானது. 2003 களில் பயன்பாட்டுக்கு வரப்பெற்ற பேருந்து. கடந்த 13 வருடங்களாக வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. Continue reading