TN 72 N 1705 அன்றும் இன்றும்

TN 72 N 1705– இரண்டு வருடங்கள் கூட ஆகாத ஒரு பேருந்து இது. துவக்கத்தில் நாகர்கோவில்-மதுரை தடத்தில் பைபாஸ் ரைடராக ஓட்டப்பட்டது. தற்போது நாளொரு தடத்தில் இயக்கப்படுகிறது. இரு வருடங்களுக்குள் இந்நிலையை எட்டிவிட்டது. ஒரு புதிய வண்டியையே இந்தப்பாடு படுத்துகிறார்கள் என்றால் பழைய வண்டிகளைப் பற்றி கேட்கவும் வேண்டுமா?  Continue reading

TN 74 N 0747 அன்றும் இன்றும்

TN 74 N 0747 – விவேகானந்தபுரம் கிளையிலிருந்து பல வருடங்களாக கன்னியாகுமரி- களியிக்காவிளைத் தடத்தில் இயக்கப்பட்டு வந்த பேருந்து. 1998-ஆம் பயன்பாட்டுக்கு வந்தது. கடந்த 15 வருடங்களாக அயராது உழைத்தது. இன்றோ நிரந்தர ஓய்வுக்குச் செல்கிறது. Continue reading

TN 38 N 0792 and TN 38 N 0793 Brothers Life

தநா 38 நா 0792 மற்றும் தநா 38 நா 0793 என்னும் இவ்விறு பேருந்துகளும் பொள்ளாச்சி மண்ணிலேயே பிறந்து, அங்கேயே ஒன்றாக வாழ்ந்து ஒரு சேர ஓரங்கட்டப்பட்டன. 1999-ஆம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வரப்பெற்று 13 வருடங்கள் நல்ல முறையில் பணியாற்றிய பின்னர் இவ்விறு பேருந்துகளுக்கும் ஓய்வு தரப்பட்டுள்ளது.
மரணத்திலும் இணை பிரியாத இவ்விரு பேருந்துகளையும் ஒரு சேர இறுதி நிலையில் பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது…

தநா 38 நா 0792
உயிறுடன் கம்பீரமாக வலம் வந்த போது
Photo0670

உடைத்தெடுக்கும் முன்
DSCN3979

DSCN3980
தநா 38 நா 0793
உயிறுடன் கம்பீரமாக வலம் வந்த போது
Photo2437
இறுதி நாள் நிலையில்
DSCN4003
இப்பேருந்தைப் பார்க்கும் போது தன்னை எப்படியாவது மீட்டுச் சென்றுவிடு என்று கூறுவதைப்போல உள்ளது
DSCN4006Life

மரணத்திலும் பிரியாத உடன்பிறப்புகள்
DSCN4004

அமரகாவியம்

TN 74 N 0652 – 1997-இல் சேரன் போக்குவரத்துக் கழகத்தில் கூண்டு கட்டப்பட்டு நாகர்கோவிலுக்கு வழங்கப்பட்ட பேருந்துகளில் இதுவும் ஒன்று. 15 ஆண்டுகள் நல்லமுறையில் ஓடி, நல்ல முறையிலேயே கழிக்கப்பட்டிருப்பதைக் கீழ்க்கண்ட படங்களில் காணலாம். இராணித்தோட்ட-2 பணிமனையைச் சார்ந்தது. கடுக்கரைத் தடத்தில் இயங்கியது. இறுதி காலகட்டத்தில் பிள்ளைத்தோப்பு தடத்தில் ஓடி ஓய்ந்தது.இறுதியாக 09.4.2013 அன்று மீட்பு வாகனத்தின் துணையுடன் சாலைகளில் பயணித்தது.
பிள்ளைத்தோப்பு தடத்தில் இயங்கிய போது 6.08.2012 அன்று வடசேரி பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் 4 ஆவது காணப்படும் படம்.

TN 74 N 0652 Re-1TN 74 N 0652 9.4.2013 Re-2TN 74 N 0652 9.4.2013 Re-1
TN 74 N 0652 6.8.2012-0378 Re

TN 32 N 1731 வாழ்ந்ததும் மறைந்ததும்

TN 32 N 1731 

தந்தைப் பெரியார் போக்குவரத்துக் கழகத்திலிருந்து நாகர்கோவில் மண்டலத்திற்கு வழங்கப்பெற்ற பேருந்து. முன் முகப்பு பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இரட்டைக் கண்ணாடிகள், மேல்புறம் தடப்பலகை. வித்தியாசமான கிரில் அமைப்பு. விழுப்புரம் கோட்டத்திற்கே உரிய கூண்டு அமைப்பு. 2002 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்து 10 வருடங்கள் ஓடி ஓய்ந்தது. இறுதியாக திருவட்டார் பணிமனையிருந்து இயக்கப்பெற்றது.

Image

இறுதியாக 9.04.2013 அன்று காணக்கிடைத்தது இக்கோலத்தில் தான். விவேகானந்தபுரம் சவக்கிடங்கிலிருந்து மீட்பு வாகனம் மூலம் இழுத்து வரப்பெற்றபோது.Image

உடைப்பதற்குக் கொண்டு செல்வதற்கு முன் சற்றே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது……Image

Image

 

தநா-74-நா-0736

தநா-74-நா-0736 என்ற இப்பேருந்து 1997 ஆம் ஆண்டில் தனது ஓட்டத்தைத் துவங்கியது. திருவட்டார் கிளையைச் சார்ந்தது. 15 வருடங்கள் உழைத்த இந்த ஹை-டெக் பேருந்து இறுதியாக சாலையில் ஓடியது 27.11.2012 அன்று மீட்பு வாகனத்தின் உதவியுடன். இறங்கிய புதிதில் இப்பேருந்திற்குத் தீட்டப்பட்டிருந்த வண்ணம் இராணித்தோட்டம் மத்திய பணிமனைக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது என்றால் மிகையில்லை. எவ்வித சேதாரமும் இல்லாமலேயே கழிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல காலம் ஓடியிருக்கும். இன்றைய நவீன பேருந்துகளை விட அத்தனை உறுதியானது.ImageImage

தநா-74-நா-0709

தநா-74-நா-0709 என்ற இப்பேருந்து 1997-இல் பயன்பாட்டுக்கு வந்து 2012 வரை 15 ஆண்டுகள் சேவையாற்றியது. மறக்க முடியாத ஒரு பேருந்து. இறுதியாக மீட்பு வாகனத்தின் பின்னால் 27.11.2012 அன்று சாலையில் பயணித்தது. வெளிச்சம் அறவே இல்லாத நிலையில் ஏனைய வாகனங்களின் ஒளி வெள்ளத்தில் எடுக்கப்பட்டது.ImageImage

TN 74 N 0808

TN 74 N 0808 -19.10.2012 அன்று இறுதியாக சாலையில் பயணித்தது. இரவு 8.00 மணிக்கு மேல் படமெடுத்தது. சாலையோரம் உள்ள மின் கம்பங்களிலும் அன்றைய தினம் விளக்குகள் எரியவில்லை. கிடைத்தவரை இலாபம் என்று படமெடுத்தேன். குழித்துறை-2 பணிமனையாக இருக்கவேண்டும். சாலையில் உழைத்துக்கொண்டிருந்தபோது எம் கண்களில் சிக்கவில்லை.ஜீவா போக்குவரத்துக் கழகத்தில் கூண்டு கட்டப்பட்டதென ஞாபகம். 1999-இல் பயன்பாட்டுக்கு வந்தது 13 வருடங்கள் உழைத்து இந்த நிலையில் பிரியா விடைபெற்றது.ImageImageImage

TN-74-N-0642 ஒரு சகாப்தம் நிறைவுறுகிறது

காலத்தால் அழியாத காவியம் – உதயமும் அஸ்தமனமும்

தநா-74-நா-0642 என்ற இப்பேருந்து 1997 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பொன்முடி இருந்த போது இராணித்தோட்டத்தில் கூண்டு கட்டப்பட்ட பேருந்துகளுடன் சேரன், பெரியார், ஜீவா போன்ற போக்குவரத்துக் கழகங்களில் கூண்டு கட்டப்பட்ட பல பேருந்துகள் ஒரே நாளில் கன்னியாகுமரி புதிய பேருந்து நிலையத்தில் வைத்து பொன்முடியால் துவக்கிவைக்கப்பட்டது. அன்றிலிருந்து இறுதி வரை கன்னியாகுமரி பணிமனையிலேயே பயன்பாட்டில் இருந்தது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பேருந்து நல்லமுறையில் இயங்கி வந்தது. என்றாலும் கடைசி இரண்டு ஆண்டுகளில் ஆங்குலர்கள் துருபிடித்து ஓட்டையாகியிருந்தது. ஷட்டர்கள் பல காணாமல் போனது.இருக்கைகளில் இரண்டு இல்லாமலிருந்தது. என்றாலும் வள்ளியூர், ராதாபுரம் போன்ற புறநகர் பேருந்துகள் செல்லும் வழித்தடங்களில் கூட இப்பேருந்து இயக்கப்பட்டது. கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன் ஒரு சேர ஆறேழு பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக எஃப்.சி-க்காக சென்றன. அவற்றில் தநா-74-நா-0626, 0634, 0643, 0740, 0803 போன்ற பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து சேர்ந்தன. 0642 மற்றும் 0714 என்ற 2 பேருந்துகள் மீள வரவில்லை. சரி இவற்றின் கதை முடிந்தது என்று முடிவெடுத்திருந்தோம். அது இன்று (13.7.2013) உறுதியானது. இன்று முற்பகல் நாகர்கோவிலிலிருந்து நண்பர் ரினோ மூலமாக அவசர தொலைபேசி அழைப்பொன்று வந்தது……. தநா-74-நா-0642 மீட்பு வாகனம் மூலம் விவேகானந்தபுரம் சந்தைக்கு இழுத்து வரப்படுவதாக….. ஓடிச்சென்று காத்திருந்து இப்படங்களை எடுக்கும் ஒரு வாய்ப்பு  நண்பர் ரினோ-வினால் கிடைக்கப்பெற்றது. எவ்வளவு பெயர்த்தெடுக்க முடியுமோ அவ்வளவும் பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளது.
இப்பேருந்தின் பின் பகுதி மற்றும் பக்கவாட்டிலுள்ள பதிவு எண்கள் மஞ்சள் பெயின்டினால் துப்புறவாக அழிக்கப்பட்டுள்ளது ஏனென்று புரியவில்லை. ரீபெயின்ட் செய்யப்படும் பேருந்துகள் கூட இவ்வளவு சுத்தமாக பெயின்ட் செய்யப்படுவதில்லை. இது வரை கழிக்கப்படும் பேருந்துகளில் இது போன்று பதிவெண் சுத்தமாக அழிக்கப்படுவதில்லை. இது புதிய நடைமுறையா? உயிரோடு உலா வந்த காட்சிகளும் ஓய்வுக்குச் செல்லும் காட்சியும்.                                                                                                 Courtesy:- Reno RubertsImageImageImageImageImage

TNSTC CBE Scrapped Buses

In CBE Division Some of the 38 N 08XX Series are Scrapped due to age Over. but we know they are in Good Condition. Better to Run atleast 2 More Years instead of Scrapping this Wonderful buses. Some of the 08XX Series Scrapped Buses as Follows…

TN 38 N 0810 of Pollachi-2 Branch Running Pollachi-Kizhavan Puthur Route click at the time of Bus Running as Spare Trip in Pollachi Area

Image

at the time of Scrap:

Image

TN 38 N 0863 earlier OPR-1 Branch and Transfer to Pollachi-1 Branch and Running in R.No 5A

Image

 

TN 38 N 0886 of MTP-1 Branch

Image

More Pics at My Picasa Album

 

 

Excellent bus under scrapping due to age over.

TN 74 N 0578 Nagercoil Region, Ranithottam-2 branch bus under scrapping due to age over.

நாகர்கோவில் மண்டலத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேல் இறுதிவரை நன்றாக உறுதியுடன் ஓடிக்கொண்டிருந்த ஒரு பேருந்து. வயதைக் காரணம் காட்டி அநியாயமாக கழிக்கப்பட்ட பேருந்து. தற்போது விவேகானந்தபுரம் பணிமனையில் சவக்கிடங்கில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறது. இன்றோ நாளையோ எம் கண்களிலிருந்து மறையவிருக்கிறது.Image